இலங்கை செய்தி

தந்த ஆபரணங்கள், புலி எண்ணெய் குப்பியுடன் ஒருவர் கைது

தந்தத்தால் செய்யப்பட்ட பல ஆபரணங்கள் மற்றும் புலி எண்ணெய் குப்பியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மேற்கு வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட அதிகாரிகள் குழு கைது செய்தனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரண பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் போது, சந்தேகநபரிடம் இருந்து ஒரு தாயத்து, ஒரு வளையல் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட மூன்று மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து புலி எண்ணெய் குப்பி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரும் பொருட்களும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. பின்னர், சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பொருட்களை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்தின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும், எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை