இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வார பொருளாதார நிலையின் அடிப்படையில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் மாற்றம் கண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த வாரத்தில், ஜப்பானிய யெனுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15.9 சதவீதமாகவும், பிரிட்டிஷ் பவுண்டிற்கு நிகரான 3.8 சதவீதமாகவும், ஏற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி இந்திய ரூபாய்க்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 9.4 சதவீதமாகவும், யூரோவுக்கு நிகரான 7மூ அதிகமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)