காணி மோசடி குறித்து பௌத்த பிக்கு மீது குற்றம்ச்சாட்டும் பிரதேச சபை உறுப்பினர்
புல்மோட்டை அரிசிமலை பௌத்தப்பிக்கு இனங்களுக்கு இடையே இனமுருகலை ஏற்படுத்தி வருவதாக பதவிஸ்ரீ புர பிரதேச சபை உறுப்பினர் அகில பிரபாத் வீரசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.
அரிசி மலை விகாரையின் விகாரதிபதியாக கடமையாற்றி வரும் பனாமுர திலகவன்ச பௌத்த பிக்கு யுத்த காலத்தின் பின்னர் இங்கு வருகை தந்ததாகவும், திருகோணமலை மாவட்டத்தில் இன முருகனை ஏற்படுத்தி இதுவரைக்கும் 6000க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை தம் வசம் வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூகங்களுக்கு இடையில் இன முறுகளை ஏற்படுத்தி அரச அதிகாரிகளை பயன்படுத்தி அவருடைய கெடுபிடி வேலைகளை முன்னெடுத்து வருவதாகவும், தென்ன மரவாடி மற்றும் சிங்கபுர மக்களின் 162 ஏக்கர் காணியை பூஜா பூமி என எனக் கூறி மோசடி செய்து வருவதாகவும் அப்பாவி மக்களுடைய காணிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பௌத்த பிக்கு சங்கமலை என்ற பகுதியை ஆக்கிரமித்து ஆவணங்கள் இருக்கின்ற காணிகளை தமது காணிய எனக் கூறி மக்களைப் பயமுறுத்தி இன முறுகளை ஏற்படுத்துவதே இவருடைய செயற்பாடாக இருப்பதாகவும் பதவி ஸ்ரீ புர பிரதேச சபை உறுப்பினர் அகில பிரபாத் வீரசூரிய வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.