TheAshes – ஆஸ்திரேலியா அணிக்கு 384 ஓட்டங்கள் இலக்கு
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.
ஜானி பேர்ஸ்டோ 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்தனர். 3ம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்களை எடுத்திருந்தது.
இதனால் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.