சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியர்கள் பரிசோதித்ததில் குறித்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்திருந்த நிலையில் மீளவும் யாழ்ப்பாணம் செல்லவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தியா வந்த ஆண் ஒருவரும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
குடிவரவு சோதனையின் பின்னர் சுங்கப் பரிசோதனைக்காக காத்திருந்த போது அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)





