இலங்கையர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி- தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது.
வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன.
இந்தநிலையில் உரப்பற்றாக்குறை நிவர்த்திக்கப்படாவிட்டால் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 61 times, 1 visits today)





