இலங்கை செய்தி

காதல் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவி மீது வாள்வெட்டு

லோயா பிரதேசத்தில் உள்ள ஞாயிறு பாடசாலை ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இன்று (02) காலை 7.45 மணியளவில் விகாரை வளாகத்தினுள் நுழைந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் மாணவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்ஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி தற்போது கந்தளாய் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​அவருடன் காதல் உறவில் ஈடுபடுமாறு கூறிய போதும் அவர் மறுத்தமையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை