இலங்கை

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! யாழ்.ஊடக அமையம்

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரியுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து, யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையையையே அவ்வாறு கோரியுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும், ஊடகப்பணியாளர்களதும் இன்னுயிர்களை இழந்தும், காணாமல் பறிகொடுத்தும் நீதி கோரி போராடி வருகின்ற யாழ்.ஊடக அமையம் இந்த கைதை வன்மையாக கண்டித்து நிற்கின்றது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டதுடன், இது தற்செயலாக நடந்த சம்பவமாக நாம் பார்க்கவில்லை. திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர, தமது பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையின் ஊடகச்சுந்திரம் தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல மணி நேரங்களுக்குப் பின்னரே பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அறிகின்றோம்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊடகவியலாளரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தரிந்துவின் இரு கைககளும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் உள்ளது.

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியது மட்டுமல்லாது அவரது அடிப்படை உரிமைகளையும் மீறி, படுமோசமான முறையில் அவரை நடத்தும் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே படுகொலையான காணாமல் ஆக்கப்பட்ட எமது நண்பர்களிற்காக நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவை தட்டிவருகின்ற நாம் இவ்வேளையில் எமது சக இன ஊடக நண்பர்களுடன் இன மத மொழி வேறுபாடுகளை தாண்டி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கைகோர்த்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content