சீனாவுக்கு காத்திருக்கும் புயல் ஆபத்து – எதிர்கொள்ள தயாராகும் மீட்பு குழுவினர்
சீனாவை தாக்கவுள்ள Doksuri என்ற மிகவும் வலுவான புயலை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயாராகியுள்ளது.
இந்த புயல் மிகவும் கடுமையாக இருக்கும் என்று, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், புயல்காற்று அசுர வேகத்தில் நேரடியாக வீசும் என்பதால் நாட்டின் எச்சரிக்கை நிலையைச் சீனா உயர்த்தியுள்ளது.
இந்தப் புயலை எதிர்கொள்ள தாய்வான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் தயாராகியுள்ளன.
முன்னதாக, பிலிப்பீன்ஸைக் கடந்துசென்ற புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன், மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் அடித்துச்சென்ற காற்றுக்கும் மழைக்கும் இருவர் உயிரிழந்தனர்.
புயல் பிலிப்பீன்ஸைக் கடந்துசென்றுகொண்டிருந்தாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளமும் மண் சரிவும் ஏற்படக்கூடும் என்று சீனா எச்சரிக்க விடுத்தது.
இதனையடுத்து, அங்கு மீன்படிப் படகுகள் கரைக்குத் திரும்புவதுடன், சில ரயில் சேவைகள் ரத்தாகிவிட்டன.
அத்துடன், சீனாவின் கடல்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.