சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பின் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியானது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு கோரி மற்றொரு குழு கையொப்பமிட்ட வேறொரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது.
“Lorry rides, Save Workers Lives – Ban Them Immediately” என்ற தலைப்பிலான அந்த கடிதம், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் உள்ளிட்ட 53 குழுக்கள் சார்பில் வெளியாகியுள்ளது.
ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதைத் தடைசெய்ய கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று 47 குழுக்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து முன்னர் கோரிக்கை மனு வெளியிட்டனர்.
வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பயண நடைமுறைகளுக்கு மாறுவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியை போக்குவரத்து அமைச்சகம் அமைத்து தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.