ஜெர்மனியில் 18 வயதை எட்டியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் பாரம்பரிய கலைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 18 வயதை எட்டும் அனைவருக்கும் கலாசார பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இளைஞர்கள் நேரடியாக கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் அழிவின் விளிம்பில் உள்ள கலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 200 யூரோ மதிப்பிலான கலாசார பாஸ், 18 வயதை எட்டிய 7.5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலாசார நுழைவுச்சீட்டை பெறும் இளம்தலைமுறையினர், 2 ஆண்டுகளுக்கு புத்தகம், நாடக அரங்கு, இசை, அருங்காட்சியகம், சினிமா உள்ளிட்டவற்றிற்கு இதனைபயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நுழைவுச்சீட்டை செயலி அல்லது இணையதளம் வாயிலாக பயன்படுத்தலாம். இது கலைகளுக்கு, நிதி சார்ந்த ஊக்கத்தை அளிக்கிறது.