குவைத்தில் இலங்கையர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
குவைத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கைதிகள் தூக்கிலிடப்பட்டதாகவும் அதில் ஒருவர் இலங்கையர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மசூதி ஒன்றி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பத்தின் குற்றவாளிக்கும் இதன்போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஷியா முஸ்லிம் பிரிவின் கீழ் உள்ள குவைத்தில் உள்ள இமாம் அல்-சாதிக் மசூதியை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழுவால் திட்டமிடப்பட்டது என தெரியவந்துள்ளது.
குவைத் மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் உட்பட 05 கைதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
இதில் மூளையாக செயல்பட்ட அப்துல்ரஹ்மான் சபா இடான், போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்பட்ட இலங்கையர், எகிப்தியர் மற்றும் குவைத் நாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மசூதி குவைத்தில் உள்ள பழமையான ஷியா மசூதிகளில் ஒன்றாகும், மேலும் பிரார்த்தனை சேவையின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே நீண்ட காலமாக மத மோதல் இருந்து வருகிறது.