சர்வதேச விசாரணை மூலம்தான் நடந்ததை நிரூபிக்க முடியும்- சாள்ஸ் நிர்மலநாதன்
சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் புதன் மாலை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,2015ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச கண் காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் என்பதே எங்களுடைய தொடர்ச்சியான வலியுறுத்தல்.
அதன் அடிப்படையில் தான் எங்களுடைய தொடர்ச்சியான கோரிக்கை அமைகிறது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கை என்பது நியாயமான ஒரு கோரிக்கையாக உள்ளது.இங்கு கொலை செய்தவர்களே விசாரணை செய்வதும் தீர்ப்பளிப்பதுமான ஒரு நாடாக இலங்கை இருக்கிறது.