வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தனது பப்புவா நியூ கினியா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில்,
நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது பார்க்கப்படுகின்றது.
(Visited 16 times, 1 visits today)