மணிப்பூர் விவகாரம்! மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை கொண்டுவர முடிவு செய்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக எதிர்க்கட்சிகளின் மத்தியில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசாங்கம் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
மோடியின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருப்பதால் மோடியின் அரசாங்கம் வாக்குகளை இழக்காது.
ஆனால், இந்த நடவடிக்கை மோடியை மணிப்பூர் பற்றி பேச வைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
மே மாதம் பெரும்பான்மையான மெய்தே குழுவிற்கும் பழங்குடியின குக்கி சிறுபான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட இன மோதல்கள் குறித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த வன்முறையில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த வாரம், இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்வதைக் காட்டும் காணொளி, உலகளாவிய சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியது.
இது மணிப்பூர் குறித்த தனது மௌனத்தை உடைக்கும்படி மோடியை கட்டாயப்படுத்தியது. இந்த சம்பவம் “இந்தியாவை அவமானப்படுத்தியது” என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த வார தொடக்கத்தில் மக்களவையில் – நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் – வன்முறை குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் இதைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது இரண்டாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது