ஹரக் கட்டாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!

போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” என்பவரை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை இன்று (26) வழங்கியுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.
வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் இருந்து 20,000 ரூபா பணத்தையும் காரையும் கொள்ளையடித்ததாகவும் ஹரக் கட்டா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)