கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட தம்பதி!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து இலங்கை வந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1500 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரசாத் ஜயவீர மற்றும் நதிஷா மதுஷானி என்ற தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டார். குறித்த இருவரது வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 19 times, 1 visits today)





