நீரிழ் மூழ்குபவர்களை கையால் பிடித்து இழுக்காதீர்கள்!
உலக நீரில் மூழ்கி தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது.
நீரில் மூழ்குதல் உள்ளிட்ட சிக்கல்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்கள் நிபுணர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது. இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
அவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நீரில் மூழ்கி பலியாகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் வருடாந்தம் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறினர்.
அதேநேரம் நீரில் மூழ்கும் நபரை கையால் பிடித்து இழுக்காதீர்கள் எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்தள்ளனர்.