கனமழையால் ஆப்கானிஸ்தானில் பலர் பலி: 40க்கும் மேற்பட்டோரை காணவில்லைg
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 74 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல்வேறு மாகாணங்களில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 100,000 குடும்பங்கள் உணவு மற்றும் நிதியுதவியைப் பெற்றுள்ளதாக தலிபான்களின் பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் இயற்கை அனர்த்தங்களினால் குறைந்தது 214 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.