மதுபானசாலை அருகே பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு..!

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே ஓடும் அருவியில் திங்கட்கிழமை (24) சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சிசு பொலித்தீன் உறையில் போடப்பட்ட நிலையில் ஓடையில் வீசப்பட்டு உள்ளது எனவும் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என கூறினார்.
(Visited 10 times, 1 visits today)