முக்கிய பிரச்சினைக்கு தீர்வு!! கட்டாய விளம்பரம் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு தடை
கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வர்த்தக விளம்பர குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளைத் தயாரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதற்காக தயாரிக்கப்பட்ட தொடர் வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களின் தனியுரிமை மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவது தொடர்பாக மக்கள் ஆணையத்திடம் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறுவனங்கள் செயல்படாததால், அதை சட்டமாக வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, விற்பனையாளர் விளம்பர உரைச் செய்தியை அனுப்பினால், பெறுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.