அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா இடம்பெற்றது.
இந் நிகழ்வு நேற்று (22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித்தா பிரதீபனின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதை அடுத்து தலைமையுரையினை தியாகேஸ்வரி ரூபன் மேற்கொண்டார்.
இந்நிகழ்வினை விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தரும் சுயாதீன ஊடகவியலாளருமான குலசிங்கம் கிலசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வின் சிறப்புரையை அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைப்பாளர் கலைவாணி தயாபரன் உட்பட கௌரவ அதிதிகள் பிரதம அதிதியின் உரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் டெலினா றொசைரோவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்,
கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் சட்ட ஆலோசகர் துளாஞ்சினி அருந்தவராஜா, உதவி கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியளலாளருமான சகா தேவராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நிறுவனமானது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் இந்நிறுவனம் நடாத்தும் இச்சான்றிதழ் கற்கை நெறிக்காக கல்முனை ,காரைதீவு, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ,பொத்துவில், உள்ளிட்ட 6 பிரதேச செயலகத்தில் இருந்து யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.