அர்ஜென்டினாவில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான ”ஆண்குறி மீன்கள்”!
அர்ஜென்டினாவின் ரியோ கிராண்டே நகரின் டியர்ரா டெல் ஃபியூகோ மாகாணத்தில் உள்ள எல் முர்டில்லருக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான ஆண்குறி மீன்கள், கரை ஒதுங்கியுள்ளன.
உள்ளூர் போர்டல் “Gaceta Truncadense” வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முந்தைய நாள் இரவு இந்தப் பகுதி முழுவதும் வீசிய கடும் புயலுக்குப் பிறகு குறித்த மீன்கள் கரையொதுங்கியதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் ஆண்குறி மீனின் தோற்றத்தை ஒரு விசித்திரமான நிகழ்வு என்று அழைக்கிறார்கள். இவ்வகையான மீன்களை உள்ளுர் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக தூண்டில்களில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆண்குறி மீன் பெரிய மீன்கள், சுறாக்கள் மற்றும் நீர்நாய்களுக்கு உணவாக பயன்படுகிறது. ஆண்குறி மீன் என்று அழைக்கப்படுவது உண்மையில் யுரேச்சிஸ் யூனிசின்க்டஸ் இனத்தின் கடல் புழு ஆகும்.
புழுக்கள் கடலுக்கு அடியில் புதைந்து வாழ்கின்றன, ஆனால் கனமான அலைகள் மூலம் அந்த மீன்கள் கரைக்கு இழுத்து வரப்படலாம்.
அவற்றின் சிறப்பு தோற்றம் இருந்தபோதிலும், கடல் புழுக்கள் ஆசியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. புழுக்களுக்கு மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, உணவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்குறி மீன்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.