மணிப்பூரை அடுத்து மேற்கு வங்காளத்திலும் அரங்கேறிய கொடூரம்; பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்திலும் இதேபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேங்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8ம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 40 பேர் தன்னை தாக்கியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
திரிணாமூல் வேட்பாளர் இமந்தா ராய், நூர் ஆலம், அல்பி எஸ்கே, ரன்பீர் பஞ்சா சஞ்சு, சுக்மல் பஞ்சா உள்ளிட்ட பலரின் பெயர்களும் FIRல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பலர் பெண்னை தாக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக FIRல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Since Mamata Banerjee’s dead conscience has finally surfaced and she is, for a change, feeling ashamed, here is the complaint of Panchla victim, who was stripped naked inside a polling booth (on 8th Jul 2023), by TMC candidate and his henchmen… copy of the FIR, which names the… https://t.co/i0ZheSV42l pic.twitter.com/ivc8IgB3i9
— Amit Malviya (@amitmalviya) July 21, 2023
மேலும், திரிணாமூல் கட்சியினர் தனது ஆடைகளைக் கிழித்து, நிர்வாணமாக்கி, கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச்சென்றதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மேங்கு வங்காள பாஜகவின் இணைப் பொறுப்பாளர் அமித் மாளவியா, இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியைத் தாக்கி ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்த சீரழிவுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரை ஒத்திவைப்பு இதனிடையே, மேங்கு வங்காள மாநிலத்தில் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த பயங்கரம் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் கூறுகையில், ‘எங்கள் மகள்கள் எந்த வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் இல்லை. அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றார்.