அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 15இல் பெண்களுக்காக அறிமுகமாகும் சிறப்பு அம்சம்

செப்டம்பர் மாதத்தில் iPhone 15ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கான புதிய அம்சம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

iPhone 15ஐ அதிகாரப் பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே, இதுசார்ந்த பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதன்படி சமீபத்தில் iPhone 15ஐபற்றி வெளிவந்த ஒரு செய்தி, i phone ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

iPhone 15 முற்றிலும் புதியதோர் வண்ணத்தில் வரப்போகிறது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்களை குறிவைத்து இந்த முயற்சியை ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் ஐபோன் 15 சீரியஸ் வரிசைகளில் இம்முறை கூடுதலாக பிங்க் நிறத்தில் ஐபோன் வெளிவரும் என கூறப்படுகிறது. பார்ப்பதற்கு பஞ்சுமிட்டாய் போல தோற்றமளிக்கக் கூடிய ஐபோன் 15ஐ, Cottton Candy வெர்ஷன் எனக் குறிப்பிட வாய்ப்புள்ளது.

இந்த நிறம் யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ இளம் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மேலும் பிங்க் நிறப் பிரியர்களை நிச்சயம் இந்த சாதனம் அதிகமாக ஈர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொதுவாகவே பெண்களுக்கு பிங்க் நிறம் அதிகம் பிடிக்கும் என்பதால் அவர்களின் இதயங்களை இது திருடப்போவது உறுதி என பலரும் கூறுகின்றனர். உலகில் iPhone பயன்படுத்து 51% பெண்கள் என வெளிவந்துள்ளது.

எனவே பெண்கள்தான் ஆப்பிள் சாதனத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த ஆப்பிள் நிறுவனம், அவர்களை குறிவைத்து iPhone 15 பிங்க் நிற வெர்ஷனை வெளியிட உள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்