ஜெர்மன் தலைநகர் பெரலினை அச்சுறுத்தி வரும் சிங்கம்
தப்பி ஓடிய சிங்கத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஜெர்மன் பொலிசார் தொடங்கியுள்ளனர். தலைநகர் பெர்லினின் தெற்கு பகுதியில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான பொலிசார் ஈடுபட்டுள்ளனர் மற்றும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தப்பி ஓடிய சிங்கத்தை கண்டுபிடிக்க தலைநகரில் தேடுதல் பணி நடந்து வருகிறது.
மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், செல்லப்பிராணிகளை வீட்டில் வைத்து பாதுகாக்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த பகுதிக்கு இந்த சிங்கம் எவ்வாறு தப்பிச் சென்றது என்பது இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சிங்கங்கள் வைக்கப்படும் பல உயிரியல் பூங்காக்கள் மற்றும் சர்க்கஸ்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அவ்வாறான எந்த இடத்திலும் சிங்கம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.