கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சடலங்களை தகனம் செய்ய அறிவுறுத்திய அதிகாரிகள் மீது வழக்கு
கோவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யுமாறு பணிப்புரை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்த போதிலும், தகனம் செய்வதன் மூலம் இலங்கை ஒரு வெறுப்புக் குற்றத்தை இழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
இதன் விளைவாக, கோவிட் தொற்றினால் தகனம் செய்யப்பட்ட ஒரு குழுவினரின் உறவினர்கள் பலர் முஸ்லிம் மக்களுக்கு அடக்குமுறையை ஏற்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.