பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைய முடியாது!! நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்
ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் பல ஆண்டுகளாக சிறிய படகுகளில் பிரித்தானியாவின் கடற்கரையில் தரையிறங்கியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இப்போது மசோதா சட்டமாக மாறுவதற்கு இருந்த கடைசி தடையும் நீங்கிவிட்டது.
“படகுகளை நிறுத்துவோம்” என்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் அறிவிப்பு, திட்டத்திற்கு கலவையான ஆதரவையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், “சட்டவிரோத குடியேற்ற மசோதா” சட்டமாக்கப்படுவதற்கான பல தடைகளை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நீக்கியுள்ளது.
சில உறுப்பினர்கள் அடிமைப் பாதுகாப்பு தொடர்பான திருத்தங்களை முன்மொழிந்தனர் மற்றும் குழந்தை புலம்பெயர்ந்தோரை எவ்வளவு காலம் தடுத்து வைக்கலாம் என்பதற்கான வரம்புகளைக் குறிப்பிடுகின்றனர்.
இந்த மசோதாவின்படி, படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும்.
இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்படுவார்கள். 2022 வாக்கில் 45,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் தென்கிழக்கு பிரிட்டனின் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை இப்போது 2018 ஐ விட 60 வீதம் அதிகரித்துள்ளது.