கட்டுக்கடங்காமல் எரியும் காட்டு தீ – சர்வதேச உதவியை நாடியுள்ள கனடா
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுதீயை அணைக்க ஆயுதப்படைகள் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீர்ர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
கனடா இந்த ஆண்டு மிகவும் மோசமான காட்டுதீ பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. ஆண்டு தொடங்கி தற்போது வரை 1கோடி ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. இதில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மழைப்பொழிவு இல்லாமல் வறண்டுபோயுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை அணைக்கும் பணியில் கனடா வீர்ர்கள் , வெளிநாட்டு வீர்ர்ளும் உட்பட சுமார் 2,000பேர் ஈடுபட்டுள்ளனர்.
இது போதாது என்று மேலும் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு வீர்ர்களின் உதவியை பிரிட்டிஷ் கொலம்பியா அதிகாரிகள் நாடியுள்ளனர்.
கனடா முழுவதும் அமெரிக்கா,மெக்சிகோ,தென்னாபிரிக்கா,தென்கொரியா,ஆஸ்திரேலியா,பிரான்ஸ்,நியூசிலாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த 1,367 தீயணைப்பு வீரர்கள் கனடா தீயணை்ப்புப் பணியாளர்களும் உதவி வருகின்றனர்