கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவு

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இரண்டாம் வருட மாணவன் ஒருவர் திங்கட்கிழமை(17) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை மேலும் உக்கிரமடையாமல் தடுக்கும் வகையில், மேற்படி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (18) விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)