வவுனியா மோதல் சம்பவம் குறித்து இருவர் கைது!
வவுனியாவில் அண்மையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.
வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
இதில் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐந்துபேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
(Visited 13 times, 1 visits today)





