ஐரோப்பா

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா

உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’எற்படுத்தப்பட்டது. தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.

இதனால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியின் முயற்சியால் ரஷ்யா-உக்ரைன் மோதலால் தேக்கி வைக்கப்பட்ட உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் “கருங்கடல் தானிய ஒப்பந்தம்”எற்படுத்தப்பட்டது. அந்த உடன்படிக்கையில் சில நிபந்தனைகளுடன் ரஷ்யா பங்கேற்றது.

Andrei Troshev: who is Wagner mercenary Putin wants to replace Prigozhin? |  Reuters

இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் 2 முறை புதுப்பிக்கப்பட்டது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று பல மாதங்களாக ரஷ்யா கூறி வந்தது.இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று காலாவதியாக இருந்தது. ரஷ்யா தொடர்பான கருங்கடல் நிபந்தனைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை, எனவே அதிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

ரஷ்யாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷ்யாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. “ஒப்பந்தங்கள் நிறைவேறியவுடன், மீன்டும் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்போம்’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவிற்கு,’ரஷ்யா- கிரிமியா இடையே உள்ள பாலத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், உக்ரைன் மீது குற்றம் சாட்டியதற்கும் தொடர்பில்லாதது’ என்று அவர் மேலும் கூறி உள்ளார். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பே, ஜனாதிபதி புதின் இந்த முடிவை அறிவித்தார்” என்று பெஸ்கோவ் கூறி உள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்