பாக்ஸ் ஆபிஸில் வசூல்மழை பொழியும் மாவீரன் ; பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியானது….
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் மாவீரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மாவீரன் இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய மண்டேலா படத்தினை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கினார்.
இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளார். வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மிஷ்கின் வில்லனாக மிரட்டி இருக்கும் இப்படத்தில் சரிதா, குக் வித் கோமாளி மோனிஷா, தெலுங்கு நடிகர் சுனில், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் ஜூலை 14-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது. பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பால் திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
மாவீரன் திரைப்படம் மூன்றே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.27 கோடி வசூலித்து உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் நாளில் ரூ. 7.61 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் பிக் அப் ஆகி ரூ. 9.34 கோடி வசூலித்தது. இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூலும் அதிகளவில் இருந்தது. அதன்படி நேற்று மட்டும் இப்படம் ரூ.10.57 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் மூன்றே நாட்களில் இப்படம் ரூ.27.52 கோடி வசூலித்து இருக்கிறது.
உலகளவில் இப்படம் மொத்தமாக ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். இதனால் விரைவில் இப்படம் ரூ.50 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மட்டும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாவீரன் திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதாக கூறப்படுகிறது. மாவீரன் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழுவும் உற்சாகமடைந்து உள்ளனர். டாக்டர், டான் படங்களை போன்று இதுவும் ரூ.100 கோடி வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Maaveeran TN Box Office
BEST day of the film came on its first Sunday.
Day 1 – ₹ 7.61 cr
Day 2 – ₹ 9.34 cr
Day 3 – ₹ 10.57 cr
Total – ₹ 27.52 crIf weekday hold is there, then it will surely surpass ₹5⃣0⃣ cr mark in the state.#SivaKarthikeyan pic.twitter.com/cGRwIG0i4s
— Manobala Vijayabalan (@ManobalaV) July 17, 2023