கனடாவில் காட்டுத்தீயை அணைக்க முற்பட்டவருக்கு நேர்ந்த துயரம்

கனடாவில் எரியும் காட்டுத்தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனடாவில் கிட்டத்தட்ட 900 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 570 கட்டுக்கடங்காதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் காட்டுத்தீப் பருவம் ஆரம்பித்ததிலிருந்து அதன் தொடர்பில் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இதுவாகும். மக்களை வெளியேற்றுவதற்கு அண்மையில் பிரிட்டிஷ் கொலம்பியா உலகம் முழுவதும் உள்ள 1,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்களின் உதவியை நாடியது.
தற்போதுள்ள சூழலில் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தீயணைப்பாளர்களின் உதவி கிடைப்பது சிரமமாகும். கனடாவில் தீயை அணைக்க முற்படும் தீயணைப்பாளர்கள் ஒரு நாளில் 14, 15, 20 மணிநேரம் வரை வேலை செய்கின்றனர்.
அங்கு 9 மில்லியன் ஹெக்டர் (hectare) அளவிலான நிலம் தீயில் எரிந்து சாம்பலானது.
(Visited 12 times, 1 visits today)