பிரிகோஜின் கொல்லப்பட்டிருக்கலாம் – பைடன்!
வாக்னர் கூலி படையின் தலைவர் ஒருவேலைவிஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வாக்னர் படை தலைவர் யெவ்கெனி பிரிகோஜினை அண்மையில் சந்திருந்ததாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையில், பைடனின் இந்த கருத்து வந்துள்ளது.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ரஷ்யாவில் பிரிகோஜினின் எதிர்காலம் என்ன என்பது நம்மில் யாருக்கும் உறுதியாகத் தெரியாது என்று நான் நினைக்கிறேன் எனக் கூறினார்.
இதற்கிடையே ரஷய் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வாக்னர் படைகளின் தலைவர் ரஷ்யாவில் இல்லை எனக் கூறியுள்ளார். வாக்னர் என்ற சட்ட நிறுவனம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)