உக்ரைனில் முக்கிய இலக்கு என்ன என்பதை அறிவித்த புட்டின்!
மேற்குலகினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட டாங்கிகளே ரஷ்யாவின் முன்னுரிமைக்குரிய இலக்காக காணப்படுகின்றன என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிற்கு மேற்குலகம் ஆயுதங்களைஅனுப்புவது யுத்தத்தின்போக்கை மாற்றாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை புட்டின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேற்குலகம் ஆயுதங்களை வழங்குவது சர்வதேச பதற்றத்தை நீடித்து மோதலை மேலும் நீடிக்கச்செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
250 கிலோமீற்றர் செல்லக்கூடிய குறுஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கும் பிரான்ஸின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன ஆனால் அவை யுத்தத்தின் போக்கை மாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேற்குலகின் டாங்கிகளே எங்களது முன்னுரிமைக்குரிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார்.