ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை – தொழில் கற்க 2500 யூரோ கொடுப்பனவு
ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வரவழைப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களில் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து இவ்வாறான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு உள்வாங்குவதற்காக கடந்த கிழமை ஜெர்மன் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் தற்பொழுது கைத்தொழில் தொடர்பான விடயத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
அதன் காரணத்தினால் இவ்வாறு ஜெர்மனியில் உள்ளவர்கள் இவ்வகையான கைத்தொழில் தொடர்பான தொழிலை கற்பதற்கு ஊக்குவிப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது ஊக்குவிப்பு பணமாக 2500 யுரோவை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இந்த கைத்தொழில் தொடர்பான விடயத்தில் வியாபாரமானது 140 பில்லியன் யுரோக்களுக்கு மேலதிகமாக உள்ள காரணத்தினால் இந்த தேவை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜெர்மனியில் தொழில் ஒன்றை செய்ய முற்படும் போது 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால் தொழிலாளர்களுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசாங்கமானது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளமை தெரியவந்துள்ளது.