பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
ONMAX DT தனியார் கம்பனியின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் 6 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் 79 கோடி ரூபா ONMAX DT யில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த 95 வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ONMAX DT தனியார் நிறுவனம் தொடர்பில் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட ரூ.79 கோடி வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்படி நிறுவனத்தின் முதலீடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதிலும், விசாரணை அதிகாரிகளால் இதுவரை எவ்வித ஆதாரங்களுடனும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை, இந்த பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.