ஆப்பிரிக்கா

மஸ்கை விட பணக்கார அரசன் பற்றி தெரியுமா?

எலான் மஸ்க், மார்க்ஷுக்கர்பெர்க், பில்கேட்ஸ், ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வரலாற்றில் இருந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடியுமா?

மாலி என்ற நாடு தற்போது வறுமை பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட நாடாக இருந்தாலும், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்த  நாடாக வரலாற்றில் அறியப்படுகிறது.

இங்குதான்  உலகின் மிகப் பெரிய பணக்காரரான மன்சா முசா என்ற அரசன் வாழ்ந்து வந்திருக்கிறான்.  இவருக்கு அரியாசனம் எளிதாக கிடைத்துவிடவில்லை.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி அபூபக்கர் என்ற அரசன் விட்டுச் சென்ற இடத்தைதான் மன்சா முசா நிரப்பியிருக்கிறார். அதாவது அபூபக்கர் என்ற அரசர், கடல் பயணங்களிலும், புதிய இடங்களை கண்டுப்பிடிப்பதிலும் ஆர்வமிக்கவர்.

இதன்படி அபூபக்கர் அட்லாண்டிக் கடலில் ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டார். 2000 கப்பல்கள்,  ஆயிரக்கணக்கான அடிமைகளுடன் தனது பயணத்தை மேற்கொண்ட இவர், தான் திரும்பி வரும் வரை தன்னுடைய அரசை பார்த்துக்கொள்ள ஒருவரை நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்ட ஒருவர் தான் மன்சா முசா.

இவருடைய ஆட்சியில்   ஆப்பிரிக்காவில் இருந்த மாலி இராச்சியம் வேகமாக வளர்ந்தது. உலகம் முழுவதும் தங்கத்திற்கான தேவை உச்சத்தில் இருந்த சமயத்தில் அவர் வளமிக்க  நாட்டை ஆண்டார்.

மான்சா மூசா

அவரது ஆட்சியில் ஆப்பிரிக்காவில் இருந்த மாலி இராச்சியம் வேகமாக வளர்ந்தது. நாட்டில் இருந்த 24 நகரங்களை மூசா இணைத்தார்.

மூசாவின் ராஜ்ஜியம் அட்லாண்டிக் கடலில் இருந்து 2000 மைல்கள் வரை ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்து இருந்தது. இன்றைய நாடுகளான நைஜர்,  செனகல்,  மொரிட்டானியா,  மாலி,  புர்கினா,  காம்பியா,  கினியா – பிசாவ்,  கினியா,  ஐவரி கோஸ்ட் அனைத்தும் அவரது சாம்ராஜ்ஜியத்தில் இடம் பெற்றன.

மன்சா மூசா கட்டிய மசூதி

அவரது நாட்டில் தங்கமும் உப்பும் பெரும் வளங்களாக இருந்தன. பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் கருத்துப்படி மூசாவின் காலத்தில் உலகில் இருந்த தங்கத்தில் பாதி அளவு மாலியிடம் இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

மத்திய கால வரலாற்றில் இத்தகைய செல்வவளத்தை அதிகம் வைத்திருந்தவர் மூசாதான். அவரது ஆட்சியில் முக்கியமான வர்த்தக மையங்கள் தங்கத்தையும் பிற பொருட்களையும் வணிகம் செய்தன. அந்த வணிகத்தின் மூலம் அவர் பெரும் செல்வத்தை பெற்றார்.

முஸ்லிம் மன்னர்

மூசா தனது 57 வயதில் 1337 இல் இறந்தார். அவருக்கு பிறகு அவரது மகன்களால் பேரரசை ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முடியவில்லை. சிறிய ராஜ்ஜியங்கள் பிரிந்து பேரரசு சிதைந்து போனது. இறுதியில் ஐரோப்பியர்கள் மாலியை ஆக்கிரமித்த போது மூசாவின் பேரரசு முற்றிலும் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு எத்தனையோ ஆட்சியாளர்கள் மாறிப்போனார்கள். ஆனால் மன்சா முசாவின் இடத்தை பிடிக்க எவரும் இல்லை என்பது நிதர்சமானது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு