அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வினோஜ் யசிங்க ஜெயசுந்தர என்ற இலங்கை இளைஞரின் சடலம் நேற்று மாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
செயற்கை நுண்ணறிவை மையமாக வைத்து கணினி பொறியியல் படித்துள்ள அவர், அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் டொக்டர் பட்டமும் படித்து வருகிறார்.
உயிரிழந்த வினோஜ் யசிங்க ஜயசுந்தர கடந்த மாதம் 22ஆம் திகதி தனது பிஎச்டி தொடர்பான ஆய்வு ஆய்வறிக்கையை சமர்பிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவின் வான்கூவர் நகருக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் ஒருவர் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தினால் சம்பவ இடத்திலேயே வினோஜ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமடைந்த வினோஜ் யசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றதோடு, பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அவர் இறக்கும் போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கிளையில் பணிபுரிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறான விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இவ்வாறு வெளிநாடுகளில் இறப்பது சந்தேகத்திற்குரியது என அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கனடாவில் உயிரிழந்த வினோஜ் யசிங்க ஜயசுந்தரவின் பூதவுடல் நேற்று மாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.