பார்வையற்ற கனடியஇளைஞரின் சாதனை முயற்சி ..!
கனடாவில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு அவர் இந்த சாதனையை நிலைநாட்டும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றார்.மிகவும் குளிர்ந்த அலைகளைக் கொண்ட குறித்த நீரிணையில் அவர் நீந்தி கடக்க உள்ளார்.
பிறக்கும் போது ஏற்பட்ட போர் ஓர் குறைபாடு காரணமாக சுமார் 20 வயதளவில் அவர் தனது பார்வையை இழந்தார்.எனினும் கடுமையான முயற்சி காரணமாக வான்கூவார் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியனவற்றை இணைக்கும் ஜோர்ஜியா நீரிணையை கடந்துள்ளார்.
தனது செல்லப்பிராணியான நாய் இந்த முயற்சிக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக அவர் குறிப்பிடுகின்றார்.பார்வை இல்லை என்ற குறை இந்த செல்லப்பிராணியினால் நீங்கி விட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.பல்வேறு இடங்களுக்கு இந்த நாய் தம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக அவர் குறிப்பிடுகின்றார்.