நேபாளம் ஹெலிகொப்டர் விபத்து ; ஐவர் பலி, ஒருவர் மாயம்

நேபாள நாட்டில் 06 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் மாயமாகியது. சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து ஹெலிகொப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடான நேபாளத்தில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.
ஹெலிகொப்டரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 5 பேருடம் பலியாகினர் ஒருவர் மாயமாகியுள்ள அவரை தேடுடும் பணி நடைபெற்று வருகிறது. அனைவரும் வெளிநாட்டு பயணிகள் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
(Visited 16 times, 1 visits today)