ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்!
உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும் சட்டவிரோத குடியேறிகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
San Francisco Chronicle வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹொண்டுராஸ் பகுதியில் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மெக்சிகன் கார்டெல்களின் உதவியுடன் போதைப்பொருள் சந்தையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள டெண்டர்லோயின் மற்றும் சவுத் ஆஃப் மார்க்கெட் சுற்றுப்புறங்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரசித்தமானவை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து மூலம் தங்கள் தெருக்களில் பணிபுரியும் இடங்களுக்குச் செல்கிறார்கள் எனவும், தொழிலுக்கு செல்வதுபோல் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹொண்டுராஸின் தலைநகரான டெகுசிகல்பாவிற்கு வடக்கே சுமார் 80 மைல் தொலைவில் உள்ள சிரியா பள்ளத்தாக்கிலிருந்து பல போதைப்பொருள் வியாபாரிகள் வருகை தந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.