15 பண பரிவர்த்தனை நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அதிரடி முடிவு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 15 பணப் பரிவர்த்தனை நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான பணப் பரிமாற்ற உரிமங்களின் நிபந்தனைக்கு இணங்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை என்றும், அந்த நிறுவனங்களுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குவது, விற்பது மற்றும் பரிமாற்றம் செய்வது அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளை மீறுவதாகக் கருதப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பணப் பரிமாற்ற உரிமங்கள் இடைநிறுத்தப்பட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியல் கீழே உள்ளது.
(Visited 6 times, 1 visits today)