கோடிக்கணக்கில் பணம்..பதிலுக்கு ஆபாச படங்கள்; சர்ச்சையில்சிக்கிய BBC செய்தி நிறுவனம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள BBC செய்தி சேனல் ஊழியர், நபர் ஒருவருக்கு அவருடைய 17 வயதில் இருந்து, 3 ஆண்டுகளாக 1கோடி 39 லட்சம் வரை பணம் கொடுத்து அதற்கு பதிலாக, ஆபாச படங்களை பெற்று வந்த விவகாரம் தெரிய வந்து உள்ளது.
இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர் கூறும்போது, ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்த கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி BBC இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். இதுபற்றி விரைவாகவும் மற்றும் உணர்வுப்பூர்வ முறையில் விசாரணை நடத்தப்படும் என தனக்கு உறுதியளித்து உள்ளார் என கூறியுள்ளார்.
செய்தியை முதலில் வெளியிட்ட தி சன் பத்திரிகை நிறுவனம்
அந்த டீன்-ஏஜ் நபரின் தாயார் கூறுகையில், பெயர் வெளியிடப்படாத அந்த BBC பணியாளர் தனது குழந்தைக்கு ரூ.1கோடி 39 லட்சத்திற்கு கூடுதலாக 3 ஆண்டுகளாக கொடுத்து வந்து உள்ளார் என கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.
இந்த விவகாரம் பற்றி அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் BBCயிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை BBC நிறுவனமும் நேற்று (ஞாயிற்று கிழமை) உறுதி செய்து உள்ளது.இதனை தொடர்ந்து ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், அந்த டீன்-ஏஜ் நபர் ஆணா, பெண்ணா என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. கடந்த மே மாதத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பிலிப் ஸ்கபீல்டு, சக பணியாளருடன் வைத்திருந்த உறவால் பணியில் இருந்து அவர், விலகினார். புத்திசாலித்தனமற்ற ஆனால், சட்டவிரோதம் அல்லாதது என அப்போது பிலிப் அந்த உறவை குறிப்பிட்டார்.