பொலிஸ்மா அதிபரின் சேவை காலம் நீடிப்பு
பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சி.டி. விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில் இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்னவிற்கு முன்னர் வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு கடந்த மே 25 நள்ளிரவுடன் முடிவடைந்ததுடன் இலங்கை பொலிஸ் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் இன்றி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் செயற்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பனிப்போர் உருவாகியிருந்ததுடன், ஒருவரைப் பரிசீலிக்கும் போது பணி மூப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும் இரண்டு வாரங்களின் பின்னர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பொலிஸ் மா அதிபரின் சேவை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.