ஸ்பெயினில் கடும் வெள்ளம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான ஜராகோசாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் பற்றிய தவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக பேருந்து சேவை வழித்தடங்கள் மாற்றப்பட்டதாகவும், கூறப்படுகிறது.
ஸ்பெயின் அதிகாரிகள் அவசரகால சேவைகளை வழங்கி வருவதாகவும், மீட்பு குழுவினர் முழு வீச்சில் பணியாற்றி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)