சீனாவில் கனமழையால் 10 மாகாணங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

சீனாவில் 10 மாகாணங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான ஜிலின், ஹீலோங்ஜியாங் மற்றும் லியோனிங் ஆகியவற்றில் பலத்த மழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.
கனமழை காரணமாக லியோனிங் மாகாணத்தில் மட்டும் 20 ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
குய்ஷூ மாகாணத்தில் ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)