ஐரோப்பா

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு : ஐ.நா விசாரணையை கோரும் மொஸ்கோ!

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ஜூலை 11 அன்று கூட்டுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து  ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ரஷ்ய அதிகாரி, டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்கு “சுவாரஸ்யமான ஓரிரு பாரபட்சமற்ற பேச்சாளர்களை” ரஷ்யா அழைக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதில், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகளை அணுகுவதில் ரஷ்யா தோல்வியடைந்தது.

ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் குழாய் வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த  குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் மேற்குலக நாடுகள் இருப்பதாக மாஸ்கோ கூறி வருகின்றது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்