ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரி கைது செய்யப்படுவாரா?
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணத்தை தனது சொந்த செலவில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ளது. இருப்பினும் மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என மூத்த சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.